டயட் விரும்பிகளுக்காக ஓட்ஸ் இட்லி..!

டின்னருக்கு ஏற்ற உணவு

news18
Updated: March 2, 2019, 8:49 AM IST
டயட் விரும்பிகளுக்காக ஓட்ஸ் இட்லி..!
மாதிரிப் படம்
news18
Updated: March 2, 2019, 8:49 AM IST
ஓட்ஸ் தற்போது பலராலும் உட்கொள்ளப்படும் டயட் உணவாக இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும்பி உண்கின்றனர். ஓட்ஸை கஞ்சியாக அருந்துவதைக் காட்டிலும் அவ்வப்போது இப்படி இட்லியாகவும் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
ரவை - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
காரட் - 1
தண்ணீர் - தேவையான அளவு
பேக்கிங் சோடா - 1 1/2 tsp
தாளிக்க :
எண்ணெய் - 1 tsp
கடலைப் பருப்பு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)செய்முறை :

ஓட்ஸை கடாயில் எண்ணெய் இன்றி வறுக்கவும். 4 - 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வதக்கவும்.
ஓட்ஸின் வெப்பம் தணிந்த பின் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலை பருப்பு சேர்த்து வதக்கவும். பின் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பொன்னிறமாக வந்ததும் அதில் ரவையை கொட்டிக் கிளரவும்.

அடி பிடிக்காமல் இருக்க சிறு தீயில் வைத்துக் கொள்ளவும்.
சற்று பொன்னிறமாக வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள ஓட்ஸை கொட்டவும். 5 நிமிடம் தொடர்ந்து கிளரிக் கொண்டே இருங்கள்.

தற்போது அந்தக் கலவையை மற்றொரு பாத்திரத்தில் கொட்டி சீவி வைத்துள்ள காரட், கொத்தமல்லி, உப்பு, பேக்கிங் சோடா, தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு நன்குக் கலக்கவும். அதில் மாவு பதத்திற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கவும்.

ஓட்ஸ் இட்லி மாவு தயார். தற்போது இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து இட்லி வெந்துவிட்டதா என பார்த்து இறக்கிவிடுங்கள்.

சுவையான இட்லி தயார். இதற்கு எல்லாவிதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.
First published: March 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...