• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஃபிட்னஸ் பிரியர்களுக்கு ஹெல்தியான ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி : நீண்ட நேரம் பசியே தெரியாது..!

ஃபிட்னஸ் பிரியர்களுக்கு ஹெல்தியான ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி : நீண்ட நேரம் பசியே தெரியாது..!

ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி

ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி

காலையில் மிதமான உணவாகவே சாப்பிடும் உங்களுக்கு இந்த ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி உதவியாக இருக்கும். ஹெல்தியான உணவை விரும்புவோருக்கு இந்த ஸ்மூதி நிச்சயம் பிடிக்கும்.

  • Share this:
ஃபிட்னஸ் பிரியர்கள் எப்போதுமே ஹெல்தியானதாகவும், வயிற்றுக்கு அதிக வேலை வைக்காத உணவாகவுமே சாப்பிடுவார்கள். காலையில் மிதமான உணவாகவே சாப்பிடும் உங்களுக்கு இந்த ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி உதவியாக இருக்கும். ஹெல்தியான உணவை விரும்புவோருக்கு இந்த ஸ்மூதி நிச்சயம் பிடிக்கும். டிரை பண்ணி பாருங்க...

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - 1
ஓட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1கப்
தயிர் - 1/2 கப்
பாதாம் - 5
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
இலவங்கப்பட்டை பொடி - சிறிதளவு



செய்முறை :

ஸ்மூதி செய்யும் முன் ஓட்ஸ் மற்றும் பாதாமை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் பாதாமை இரவே ஊற வைத்து தோலை உறித்து பயன்படுத்துங்கள்.

ஆப்பிளை தோல் சீவிக்கொள்ளுங்கள்.

இவங்கெல்லாம் சீத்தாப்பழம் சாப்பிடவே கூடாதா? கட்டுக்கதைகளை உடைக்கும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ..!

இப்போது தோல் சீவிய ஆப்பிள் துண்டுகள் , ஊற வைத்த ஓட்ஸுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து ஸ்மூதியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி தயார். ஒரு கிளாஸில் ஊற்றி குடியுங்கள்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: