• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நூடுல்ஸில் பாயாசம் செய்து ருசித்துள்ளீர்களா..? இதோ ரெசிபி..!

நூடுல்ஸில் பாயாசம் செய்து ருசித்துள்ளீர்களா..? இதோ ரெசிபி..!

நூடுல்ஸில் பாயாசம்

நூடுல்ஸில் பாயாசம்

Food |

  • Share this:
    நூடுல்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி உண்ணக் கூடியது. என்றைக்காவது அதில் இனிப்பு சுவையில் பால் பாயாசம் எப்படி செய்வது என யோசித்திருக்கிறீர்களா..? இதுவரை இல்லை எனில் இந்த ரெசிபியை பாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    பால் - 1 கப்
    சர்க்கரை - தே.அ
    நெய் - 1 ஸ்பூன்
    காய்ந்த ரோஜா இதழ் - சிறிதளவு
    முந்திரி , திராட்சை - கையளவு



    செய்முறை :

    முதலில் பாத்திரத்தில் பால் காய்ச்சிக்கொள்ளுங்கள். பால் கொதிநிலை வந்ததும் நூடுல்ஸை உடைத்து போட்டு கிளறவும்.

    அடுத்ததாக காய்ந்த ரோஜா இதழ்களை கசக்கித் தூவுங்கள். பின் தேவையான அளவு சர்க்கரை கலந்து கிளறுங்கள். கிளறிக் கொண்டே இருக்க கெட்டி பதத்தில் வரும். இறுதியாக அடுப்பை அனைத்துவிடுங்கள்.

    பின் நெய் ஊற்றி முந்திரி, காய்ந்த திராட்சையை தாளித்து கொட்டுங்கள். அவ்வளவுதான் சுவையான நூடுல்ஸ் பால் பாயாசம் தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: