முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கத்தரிக்காய் வைத்து ஒரு சூப்பரான சுக்கா செய்யலாமா..? சிக்கனே தோத்துரும்..!

கத்தரிக்காய் வைத்து ஒரு சூப்பரான சுக்கா செய்யலாமா..? சிக்கனே தோத்துரும்..!

brinjal sukkah

brinjal sukkah

கத்தரிக்காயை இப்படி சமைத்தால், மட்டன் சிக்கன் எல்லாம் தோத்துரும். நான்வேஜ் ஸ்டைலில் கத்தரிக்காய் சுக்கா செய்து அசத்துங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

கத்தரிக்காய் நம்மில் பலருக்கு பிடிக்காத காய்கறிகளில் ஒன்று. ஆனால், அது உடலுக்கு சில ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. நாம் எவ்வளவு தான் கத்தரிக்காயை சுவையாக சமைத்து கொடுத்தாலும், நமது குழந்தைகள் அதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். மட்டன் சிக்கன் எல்லாம் தோத்து போற அளவுக்கு ஒரு சூப்பரான கத்தரிக்காய் சுக்கா செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் – கால் கிலோ.

சின்ன வெங்காயம் – 10.

சோம்பு – அரை ஸ்பூன்.

சீரகம் – அரை ஸ்பூன்.

கடுகு – அரை ஸ்பூன்.

வெந்தயம் – கால் ஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

மிளகாய்த்தூள் – முக்கால் ஸ்பூன்.

தனியாத்தூள் – அரை ஸ்பூன்.

மிளகு தூள் – அரை ஸ்பூன்.

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.

எண்ணெய் – 6 ஸ்பூன்.

கருவேப்பிலை – ஒரு கொத்து.

கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

செய்முறை :

முதலில் 1/4 கிலோ கத்தரிக்காயை காம்பு நீக்கி சுத்தம் செய்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பின்னர், அதை சிறு சிறு துண்டுகளாக அரிந்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து போட்டு வைக்கவும்.

இதையடுத்து, தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும் மற்றும், சுக்கா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது, அடுப்பில் கடாய் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர், இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும். அதன் பின், அரிந்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

கத்தரிக்காய் எண்ணெயில் எவ்வளவு நன்றாக வேகிறதோ, அவ்வளவு சுவையாக இருக்கும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு 5-10 நிமிடத்திற்கு பாத்திரத்தை மூடி வைக்கவும்.

இறுதியாக இதில் நறுக்கி வைத்த கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான கத்தரிக்காய் சுக்கா ரெடி. இதை தயிர் சாதம், சாம்பார், ரசம் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

First published:

Tags: Brinjal, Food recipes, Healthy Food