வித்தியாசமான சுவையில் நெத்திலி கருவாடு குழம்பு - ரெசிபி இதோ...

நெத்திலி கருவாடில் குழம்பு வைத்தால் வீடே மணக்கும்.

வித்தியாசமான சுவையில் நெத்திலி கருவாடு குழம்பு - ரெசிபி இதோ...
நெத்திலி கருவாடு குழம்பு
  • Share this:
நெத்திலி கருவாடில் குழம்பு வைத்தால் வீடே மணக்கும். பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் இந்த குழம்பை வீட்டில் செய்து பாருங்கள். 

தேவையான பொருட்கள் :

நெத்திலி கருவாடு - 50 கிராம்


நல்லெண்ணெய் - 2 tsp
கடுகு உளுந்து - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவுவெந்தையம் - 1/2 tsp
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 8
தக்காளி - 2
குழம்பு மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் - 1/2 tsp
உப்பு - தே.அ
புளி - நெல்லிக்காய் அளவு
கெட்டி தேங்காய் பால் - 1 கிளாஸ்செய்முறை :

நெத்திலி கருவாடை சுத்தம் செய்ய தலைகளை நீக்கிவிடுங்கள். பின் கிண்ணத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கருவாடுகளை போட்டு அலசி எடுங்கள். அதை தனியாக வைத்துவிடுங்கள்.

பால் சார்ந்த உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பை குறைக்குமா..?

தேங்காய் பால் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். புளியை ஊற வைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறியுங்கள் பொறிந்ததும் வெந்தையம் சேர்க்கவும். அடுத்ததாக கறிவேப்பிலையும் பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் சுருங்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றுங்கள். எண்ணெய் பிரிந்து வரும்வரை தக்காளியை வதக்குங்கள்.

வதங்கியதும் மிளகாய் தூள் , மஞ்சள் தூள் தூவுங்கள். அதன் பிறகு ஊற வைத்த புளி தண்ணீரை ஊற்றுங்கள்.

நன்குக் கலந்துவிட்டு தட்டு போட்டு மூடி கொதிக்க விடுங்கள். புளி, மிளகாய் தூள் வாசனை போனதும் தட்டைத் திறந்து தேங்காய் பாலை ஊற்றி கலக்குங்கள்.

மீண்டும் 7 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். சற்று சுண்டியதும் உப்பு சேருங்கள். கருவாட்டில் உள்ள உப்பை ருசி பார்த்துவிட்டு போடுங்கள். இல்லையெனில் கருவாடு உப்பு ஊறி குழம்பு உப்பு கரித்துவிடும்.

 

குழம்பு சுண்டி தேவையான அளவிற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் மணமணக்கும் நெத்திலி கருவாடு தயார்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading