• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புரட்டாசி மாத விரதம் முடிந்துவிட்டதா..? கமகமனு இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு செஞ்சு சாப்பிடுங்க..

புரட்டாசி மாத விரதம் முடிந்துவிட்டதா..? கமகமனு இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு செஞ்சு சாப்பிடுங்க..

நெத்திலி கருவாட்டு குழம்பு

நெத்திலி கருவாட்டு குழம்பு

உங்களை நாவூற வைக்கும் நெத்திலி கருவாடில் குழம்பு செஞ்சு சாப்பிடுங்க..வீடே மணக்கும்.

  • Share this:
அசைவம் இல்லா புரட்டாசி மாத விரதம் இருந்து நாக்கு சுவை இல்லாமல் போச்சா..? உங்களை நாவூற வைக்கும் நெத்திலி கருவாடில் குழம்பு செஞ்சு சாப்பிடுங்க..வீடே மணக்கும். பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் இந்த குழம்பின் ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

நெத்திலி கருவாடு - 50 கிராம்
நல்லெண்ணெய் - 2 tsp
கடுகு உளுந்து - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தையம் - 1/2 tsp
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 8
தக்காளி - 2
குழம்பு மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் - 1/2 tsp
உப்பு - தே.அ
புளி - நெல்லிக்காய் அளவு
கெட்டி தேங்காய் பால் - 1 கிளாஸ்



செய்முறை :

நெத்திலி கருவாடை சுத்தம் செய்ய தலைகளை நீக்கிவிடுங்கள். பின் கிண்ணத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கருவாடுகளை போட்டு அலசி எடுங்கள். அதை தனியாக வைத்துவிடுங்கள்.

தேங்காய் பால் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். புளியை ஊற வைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறியுங்கள் பொறிந்ததும் வெந்தையம் சேர்க்கவும். அடுத்ததாக கறிவேப்பிலையும் பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் சுருங்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றுங்கள். எண்ணெய் பிரிந்து வரும்வரை தக்காளியை வதக்குங்கள்.

வதங்கியதும் மிளகாய் தூள் , மஞ்சள் தூள் தூவுங்கள். அதன் பிறகு ஊற வைத்த புளி தண்ணீரை ஊற்றுங்கள்.

மல்லி சிக்கன் செய்ய ரெசிபி

நன்குக் கலந்துவிட்டு தட்டு போட்டு மூடி கொதிக்க விடுங்கள். புளி, மிளகாய் தூள் வாசனை போனதும் தட்டைத் திறந்து தேங்காய் பாலை ஊற்றி கலக்குங்கள்.

மீண்டும் 7 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். சற்று சுண்டியதும் உப்பு சேருங்கள். கருவாட்டில் உள்ள உப்பை ருசி பார்த்துவிட்டு போடுங்கள். இல்லையெனில் கருவாடு உப்பு ஊறி குழம்பு உப்பு கரித்துவிடும்.

குழம்பு சுண்டி தேவையான அளவிற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் மணமணக்கும் நெத்திலி கருவாடு தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: