கேரளாவில் நேந்திர வகை வாழைப்பழம் மிகவும் பிரபலம். இது பல வகையான நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே நேந்திர பழத்தை வைத்து அருமையான நேந்திரபழ ஜாமுன் செய்யலாம். இந்த டெசர்ட் இனிப்பு பலருக்கும் பிடிக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
நேந்திர வாழைப்பழம் - 2
நெய் - 3 tbsp
சர்க்கரை பாகு செய்ய :
சர்க்கரை - 400 கிராம்
தண்ணீர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 tsp
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை :
முதலில் சர்க்கரை பாகு செய்துகொள்ளுங்கள். அதற்கு ஒரு கிண்ணம் வைத்து அதில் தண்ணீர் விட்டு சர்க்கரை கலந்து உருகும் வரை கிளறுங்கள். உறுகியதும் ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து கெட்டியான பதம் வரும் வரை கொதிக்கவிடுங்கள்.
கையில் ஒட்டும் அளவுக்கு பாகு இருக்க வேண்டும். அந்த பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாகை தனியாக வைத்துவிடுங்கள்.
அடுத்ததாக நேந்திரம் பழத்தை 1 இஞ்சு அளவுக்கு நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து நெய் விட்டு உருகியதும், அதில் வாழைப்பழத்தை போட்டு பொறிக்க வேண்டும்.
சிறு தீயில் வைத்து பொன்னிற்றமாக மாறும் வரை பொறிக்கவும். பொறித்ததும் அதை ஒரு தட்டில் போடுங்கள். சூடு கொஞ்சம் தனிந்ததும் தனியாக எடுத்து வைத்து சர்க்கரை பாகு தண்ணீரில் போட்டு மூழ்கவிடுங்கள். பின் தட்டுபோட்டு 2 - 3 மணி நேரம் அப்படியே விடுங்கள். அதன் பிறகு சுவைத்துப் பாருங்கள். சுவையில் மெய் மறந்து போவீர்கள்.