முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டேஸ்டியான நாட்டு கோழி குருமா செய்யனுமா..? இதோ ரெசிபி..!

டேஸ்டியான நாட்டு கோழி குருமா செய்யனுமா..? இதோ ரெசிபி..!

நாட்டுக் கோழி குருமா

நாட்டுக் கோழி குருமா

Nattu Kozhli Kuruma | நாட்டு கோழி குருமாவை இட்லி, சப்பாத்தி, சாதம், தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டு கோழி குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகமாக செய்து சாப்பிடுவார்கள். இதனை இட்லி, சப்பாத்தி, சாதம், தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். இதனை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - ஒரு கிலோ

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

தனியா தூள் - ஒரு ஸ்பூன்

தேங்காய் - அரை மூடி

கசகசா - ஒரு ஸ்பூன்

முந்திரி - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை 

1. முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

2. அதன் பிறகு தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு  வதக்கி கொள்ள வேண்டும்.

3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து  வதக்கவும்.இதன் பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

4. மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரை வேக விட்டு எடுக்கவும். அதில் கொஞ்சம் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டு கோழி குருமா ரெடி.

First published:

Tags: Chicken Recipes