புளிப்பான சுவையில் நார்த்தங்காய் பச்சடி: எப்படி செய்வது..?

புளிப்பான சுவையில் நார்த்தங்காய் பச்சடி: எப்படி செய்வது..?
நார்த்தங்காய் பச்சடி
  • Share this:
நார்த்தங்காயை வைத்து புளிப்பான சுவையில் பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம். எல்லா உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

நார்த்தங்காய் - 2


பச்சை மிளகாய் - 2
புளித்தண்ணீர் - 2 கப்
மஞ்சள் - 1 tspவெல்லம் - 1 tsp
வெந்தையப் பொடி - 1 tsp
கடுகு - 1 tsp
நல்லெண்ணெய் - 2 tsp
உப்பு - தே.அ



செய்முறை :

நார்த்தங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உள்ள சாறைப் பிழிந்து இரண்டையும் தனியாக வைத்துவிடுங்கள். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறு தீயில் வைத்து கடுகு போட்டு பொரிக்க விடுங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும் வெங்காயத்தாள் பொரியல் : எப்படி செய்வது ?

பின் மஞ்சள் தூள் மற்றும் வெந்தையப் பொடி போடுங்கள். அடுத்ததாக பச்சை மிளகையும் நார்த்தங்காயையும் சேர்த்து வதக்குங்கள்.

காய் சுருங்கியது உப்பு சேர்த்து பிரட்டுங்கள். அடுத்ததாக புளி தண்ணீர் ஊற்றி கிளறி 2 நிமிடங்களுக்கு சிறு தீயில் கொதிக்க வையுங்கள்.

கொதித்து கெட்டியாக வரும்போது வெல்ல சேருங்கள். மீண்டும் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். நன்கு கொதிநிலை வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

தற்போது நார்த்தங்காய் சாறை ஊற்றி நன்கு கலந்துவிடுங்கள். தற்போது அதை டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போதெல்லாம் எடுத்து சாப்பிடலாம். புளிப்பு சுவையில் அட்டகாசமாக இருக்கும்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading