Home /News /lifestyle /

காரசாரமான மட்டன் கறி ஊறுகாய் செய்வது எப்படி?

காரசாரமான மட்டன் கறி ஊறுகாய் செய்வது எப்படி?

இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் ஊறுகாய். இன்று இந்த மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்

மாங்காய் ஊறுகாய், காய்கறி ஊறுகாய் என பலவிதமான ஊறுகாய்கள் செஞ்சு சாப்பிட்டுருப்பீங்க... ஆனால் மட்டனில் கறி ஊறுகாய் செஞ்சுரூக்கீங்களா?

தேவையான பொருட்கள்

எலும்பு இல்லாத கறி - 1 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

இஞ்சி - 1/4 கிலோ

பூண்டு - 60 கிராம்

கிராம்பு - 15 கிராம்

சிரகம் - 15 கிராம்

ஏலக்காய் - 15 கிராம்

உப்பு - 60 கிராம்

சிகப்பு மிளகாய் - 30 கிராம்

ஜாதி பத்திரி - 1/4 ஸ்பூன்

ஜாதிக்காய் - 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கிராம்பு, சிரகம், ஏலக்காய், உப்பு, சிகப்பு மிளகாய், ஜாதி பத்திரி, ஜாதிக்காய் இவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலி யில் 2 கப்  நல்லெண்ணெய் ஊற்றிக் காய வைத்து, அரைத்த மசாலா பொருட்கள் அனைத்தையும் இத்துடன் சேர்த்து நன்கு சிவக்க வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடி கனமானப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில்  கறியைப் போடவும். அது விடும் தண்ணீரிலேயே கறியை கிளறி, தண்ணீர் நன்றாக வற்றியப் பின் இறக்க வேண்டும்.

பின்னர் வதக்கி வைத்துள்ள மசாலாவுடன் இக்கறித் துண்டுகளைப் போட்டு, 1 கப் வினிகரை ஊற்றி, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கிளறி இறக்கவும். பின், மீண்டும் 1/2 கப் வினிகர் ஊற்றி, இத்துடன் மாங்காய் பௌடர் 30 கிராம் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் சுத்தமான பாட்டில்களில் அடைத்து, மூடி வைத்து ஏழு நாட்களுக்குப் பின் உபயோகிக்கவும்.

மேலும் படிக்க... மட்டன் கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Pickle

அடுத்த செய்தி