விரைவில் மட்டன் குழம்பு : குக்கரில் செய்ய இதுதான் எளிய வழிமுறை

விரைவில் மட்டன் குழம்பு : குக்கரில் செய்ய இதுதான் எளிய வழிமுறை
மட்டன் குழம்பு
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 11:40 AM IST
  • Share this:
மட்டன் குழம்பு குக்கரில் செய்வதால் நொடியில் வேலை முடிந்துவிடும். அதேசமயம் மட்டனும் நன்கு வெந்திருக்கும். எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டுக் கறி - 1 கிலோ


கடலை எண்ணெய் - 40 ml
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 3ஸ்டார் பூ- 2
பிரிஞ்சு இலை - 1
சோம்பு - 1/2 Tsp
சின்ன வெங்காயம் - 15
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 Tsp
தக்காளி - 2
மஞ்சள் பொடி - 1 Tsp
மிளகாய் பொடி - 1 Tsp
மிளகு பொடி - 1/2 Tsp
உப்பு - தே.அ
மட்டன் குழம்பு பொடி - 3 1/2 Tsp
தண்ணீர் - 2 கப்
முந்திரி - 10
கசகசா - 3/4 Tsp
கரம் மசாலா - 1/2 Tsp
கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை போட்டு வதக்குங்கள். பின் சோம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மட்டனை சேர்த்து அதோடு மஞ்சள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிறட்டுங்கள். மசாலா நன்கு சேர வேண்டும்.

மாலை டீ நேரத்தை இனிதாக்கும் உருளைக்கிழங்கு போண்டா : எப்படி செய்வது ?

அடுத்ததாக மிளகுப் பொடி, மட்டன் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்துப் பிறட்டி தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அடுத்ததாக குக்கரை மூடிவிட்டு ஐந்து விசில் விடுங்கள்.

அதற்கிடையே முந்திரி மற்றும் கசகசாவை மைய அரைத்துக்கொள்ளுங்கள். விசில் வந்ததும் குக்கரைத் திறந்து மீண்டும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து குழம்பை கொதிக்க வையுங்கள்.

ஒரு கொதி வரும் போது அரைத்த முந்திரி பேஸ்டை சேருங்கள். 5 நிமிடங்களுக்குக் கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான மட்டன் குழம்பு தயார்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading