முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காளான் கிரேவி சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்... இன்னைக்கே டிரை பண்ணுங்க...

காளான் கிரேவி சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்... இன்னைக்கே டிரை பண்ணுங்க...

காளான் கிரேவி

காளான் கிரேவி

காளான் புரதச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த உணவு.

  • Last Updated :

காளான் புரதச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த உணவு. இதில் கிரேவி செய்து சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

காளான் - 5

வெங்காயம் - 2

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

தனியா தூள் - 1 ஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தே. அ

எண்ணெய் - தே. அ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

செய்முறை :

காளானை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி காளானை வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். காளான் சற்று சுருங்க வேண்டும்.

வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.

காளான் வதக்கிய அதே எண்ணெயில் பட்டை , சோம்பு போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். பின் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?

நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் காளான் சேர்த்து பிரட்டுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

தற்போது சிறிய தீயில் கொதிக்க வையுங்கள். தண்ணீர் வற்றி கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் காளான் கிரேவி தயார்.

First published:

Tags: Mushroom, Mushroom recipes