மஷ்ரூமை நெய் ஊற்றி காரசார சுவையில் வறுத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா..? மிக எளிதாக செய்ய ரெசிபி கீழே...
தேவையான பொருட்கள் :
மஷ்ரூம் - 400 கிராம்
ஊற வைக்க :
தயிர் - tbsp
எலுமிச்சை சாறு - 1 tbsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
மசாலா :
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 tsp
கிராம்பு - 2
வெந்தையம் - 1/4 tsp
சீரகம் - 1 tsp
தனியா - 2 tsp
பூண்டு - 6 பற்கள்
புளி பேஸ்ட் - 1 tbsp
மற்ற பொருட்கள் :
நெய் - 2 tbsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தே.அ
செய்முறை :
மஷ்ரூமை சிறு துண்டுகளாக நறுக்கி அதை ஊற வையுங்கள். ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.
மசாலா பொடி தயாரிக்க காய்ந்த மிளகாய்,
மிளகு, கிராம்பு, வெந்தையம், சீரகம், தனியா ஆகியவற்றை எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக்கொள்ளுங்கள்.
மிக்ஸியில் அரைக்கும்போது பூண்டு, புளி பேஸ்ட் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
காரசார சுவையில் இறால் தொக்கு எப்படி செய்வது..?
அடுத்து மஷ்ரூமை வறுக்க சிறு தீயில், கடாய் வைத்து நெய் ஊற்றுங்கள். நெய் உருகியதும் கறிவேப்பிலை போடுங்கள்.
பின் ஊற வைத்துள்ள மஷ்ரூமை போட்டு பிரட்டுங்கள். அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கிக்கொண்டே இருங்கள்.
தண்ணீர் வற்றியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேருங்கள். உப்பு தூவி கிளறுங்கள். சற்று அடி பிடிப்பது போல் இருந்தால் நெய் விட்டுக்கொள்ளுங்கள்.
வேகும் வரை அடிப்பிடிக்காமல் பிரட்டிக்கொண்டே இருங்கள். வெந்ததும் உப்பு சரி பார்த்து அணைத்துவிடுங்கள்.
அவ்வளவு தான் மஷ்ரூம் கீ ரோஸ்ட் தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பர்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.