சப்பாத்தியை வெறுமனே சுட்டு சாப்பிடுவதை விட சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டு பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சத்து நிறைந்த ஒன்றாகவும் இருக்கும் முருங்கைக் கீரை சப்பாத்தியை எப்படி செய்யலாம்? வாங்க பாக்கலாம்.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி மாவு - 1 கப்
முருங்கைக் கீரை - 1/4 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 5
மஞ்சள் - 1 சிட்டிகை
உப்பு - தே . அளவு
செய்முறை :
வெங்காயம் மற்றும் முருங்கைக் கீரை மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
சப்பாத்தி மாவு பிசைய பாத்திரத்தில் மாவு போட்டு அதோடு உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் , முருங்கைக் கீரை, மஞ்சள் , பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.
தற்போது அனைத்தையும் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எப்போதும்போல் சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளுங்கள்.
பின் அரை மணி நேரம் ஊற வைத்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக் கல்லில் சுட்டு எடுத்தால் முருங்கைக் கீரை சப்பாத்தி ரெடி.
இதை அப்படியேவும் சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.