திடீர் முறுக்கு... மாலையில் ருசிக்க நல்ல நொறுக்குத்தீனி.. செய்வது எப்படி ?

திடீர் முறுக்கு ஈசியாக ருசியாக செய்வது எப்படி என்பதை எளிதான முறையில் காணலாம்

திடீர் முறுக்கு... மாலையில் ருசிக்க நல்ல நொறுக்குத்தீனி.. செய்வது எப்படி ?
மாலையில் ருசிக்க நல்ல நொறுக்கு தீனி
  • Share this:
திடீர் முறுக்கு செய்யத் தேவையானவை :

  • பச்சரிசி : அரை கிலோ  • உளுத்தம் பருப்பு : அரை ஆழாக்கு

  • பொட்டு கடலை: அரை ஆழாக்கு

  • எள் : 2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் : 1 ஸ்பூன்

  • வெண்ணை அல்லது டால்டா : 100 கிராம்

  • ரீபைண்ட் ஆயில் : அரை லிட்டர்


செய்முறை : 

அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் கெட்டியாக அரைத்தெடுக்க வேண்டும். பொட்டுக்கடலையை மிக்சியில் போட்டு நன்கு மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். உளுத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுத்து சற்று ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடியாக எடுத்து சளித்தது வைத்துக்கொள்ளவும்.

பின்னர், மிக்சியில் எடுத்த உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, எள் என அனைத்தையுமே ஒன்றாக கலந்து வெண்ணை அல்லது டால்டா சேர்த்து நன்கு பிசைந்து கொள்க. பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின்னர் மாவை முறுக்கு அச்சில் போட்டு அதனை பிழிந்து எடுத்தால் சுவையான முறுக்கு ரெடி

 
First published: April 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading