முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சாதம் மீந்துவிட்டால் முறுக்கு சுடலாமா.. மாலை ஸ்நாக்ஸுக்கு ரெடி பண்ணிடுங்க..!

சாதம் மீந்துவிட்டால் முறுக்கு சுடலாமா.. மாலை ஸ்நாக்ஸுக்கு ரெடி பண்ணிடுங்க..!

முறுக்கு

முறுக்கு

இனிமேல் சாதம் மீந்துவிட்டால் அதனை வீணாக்காமல் இது போல சுவையான முறுக்கை செய்து பாருங்கள்...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மீதமான சாதத்தை வைத்து இப்படி ஒரு முறை முறுக்கை சுட்டு பாருங்கள். இதன் சுவை மொறுமொறுவென அட்டகாசமாக இருக்கும். அதேசமயம் மீதமான சாதத்தை நாம் வீணாக்காமலும் இருக்கலாம். பழைய சாதத்தில் முறுக்கு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் 

தேவையான பொருட்கள்:

முதலில் மீதமான சாதம் – 1 கப்,

கடலை மாவு – 1/4 கப்,

அரிசி மாவு – 1/4 கப்,

பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

எள்ளு, சீரகம் – 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீதமான சாதத்தை போட்டு கெட்டியாக  அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் சாதத்தை அரைக்க முடியவில்லை என்றால், 1 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, எள்ளு, சீரகம், மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் முதலில் பிசைந்து பாருங்கள்.

3. சாதத்தில் இருக்கும் தண்ணீரோடு சேர்த்து பிசைந்தால் முறுக்கு மாவு பதத்திற்கு வந்துவிடும். தேவைப்பட்டால அளவோடு தண்ணீரை தெளித்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது நமக்கு தேவையான முறுக்கு மாவு தயார்.

4. முறுக்கு மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் அரிசி மாவையும் கடலை மாவையும் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். தள தளவென இருக்கும் முறுக்கு மாவில் முறுக்கை எண்ணெயில் பிழிந்தால், எண்ணெய் குடிக்கும்.

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... ரிப்பன் பக்கோடா செய்வது

5. முக்கியமாக முறுக்கு அச்சில் உள்ளே எண்ணெய்யை லேசாக தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு தயாராக வைத்திருக்கும் முறுக்கு மாவை சிறு பாகங்களாக பிரித்து கொள்ள வேண்டும்.

6. எண்ணெய் தடவிய முறுக்கு அச்சில் மாவைப் போட்டு, ஜல்லிக்கரன்டியின் பின்பக்கம் கொஞ்சம் எண்ணெயை தடவி முறுக்கினை பிழிந்து, அதை அப்படியே சூடான எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு முறுக்கு தயாராகிவிடும். அவ்வளவு தான்.

7. மீதமான சாதத்தில் செய்த முறுக்கா இது, என்று அனைவரும் கேட்பார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

First published:

Tags: Evening Snacks