ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோடைக்கு ஏற்ற மோர் குழம்பு : நொடியில் செய்ய ரெசிபி..

கோடைக்கு ஏற்ற மோர் குழம்பு : நொடியில் செய்ய ரெசிபி..

மோர் குழம்பு

மோர் குழம்பு

வெயில் காலத்திற்கு சாப்பிட அமிர்தமாக இருக்கும்...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வெயில் காலத்தில் மோர் குழம்பு இருந்தாலே போதும் விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதற்கு பொருத்தமாக புதினா துவையல் தொட்டுக்கொண்டால் இன்னும் ருசியாக இருக்கும்.

  தேவையான பொருட்கள்

  தயிர் - 1 கப்

  உப்பு - தே.அ

  வெண்டைக்காய் - 3

  அரைக்க

  தேங்காய் - 1/2 கப்

  மஞ்சள் பொடி - 1/2 tsp

  சீரகம் - 1/2 tsp

  இஞ்சி - 1/2 துண்டு

  பூண்டு - 3

  காய்ந்த மிளகாய் - 2

  பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

  தாளிக்க

  கடுகு - 1/2 tsp

  எண்ணெய் - 1tsp

  கருவேப்பிலை - சிறிதளவு

  காய்ந்த மிளகாய் - 1

  செய்முறை :

  வெண்டைக்காயை உப்பு போட்டு எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

  தயிரில் உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள். பின் அரைத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.

  சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செஞ்சு பாருங்க : இதுதான் சரியான சைட் டிஷ்னு சொல்லுவீங்க..!

  பின் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். அதோடு வதக்கிய வெண்டைக்காயையும் ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள்.

  பின் அதை தயிரில் சேர்த்து கலந்துவிடுங்கள். பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள் அல்லது கொதிக்க வைக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம்.

  அவ்வளவுதான் மோர் குழம்பு தயார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Food recipes, Summer Food