போர் அடிக்கும் போது செஞ்சு சாப்பிடுங்க பச்சை பயறு பாயாசம்!

இப்படி சமைத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

போர் அடிக்கும் போது செஞ்சு சாப்பிடுங்க பச்சை பயறு பாயாசம்!
பச்சை பயறு பாயாசம்
  • News18
  • Last Updated: August 28, 2019, 7:48 PM IST
  • Share this:
உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துகளை அளிக்கக் கூடிய பச்சை பயறை வேக வைத்து சாப்பிடுவதை விட இப்படி இனிப்பு சுவையில் பாயாசமாக சமைப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

பச்சை பயறு - 1 கப்


வெல்லம் - அரை கப்

தேங்காய் - அரை கப்

ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்முந்திரி - கால் கப்

நெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

பச்சைப் பயறை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் வேக வைத்து 4 விசில் வரை காத்திருக்கவும்.

அந்த சமயத்தில் பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு போல் உருக வையுங்கள்.

பயறை இறக்கியதும் அதை ஒன்றும் பாதியுமாக கடைந்துகொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் பயறு கொதிக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

அதை அடுப்பில் நன்கு கொதிக்க வையுங்கள்.

பின் உருக வைத்த வெல்லத்தை ஊற்றி நன்குக் கலக்கி கொதிக்க விடுங்கள். கொதி நிலை வந்ததும் துருவிய தேங்காயை போட்டுக் கலக்குங்கள்.

போதுமான கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிட்டு நெய்யில் பாதாம் பருப்பை தாளித்து அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொட்டிக் கிளறுங்கள்.

சுவையான பச்சை பயறு பாயாசம் தயார்.
First published: August 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading