மாலையில் சுடச்சுட சுவைத்து பாருங்க பாசிப் பருப்பு அல்வா..! 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி

மாலையில் சுடச்சுட சுவைத்து பாருங்க பாசிப் பருப்பு அல்வா..! 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி

பாசி பருப்பு அல்வா

அட்டகாச சுவையில் தெகிட்ட தெகிட்ட சுவைக்கலாம்.

  • Share this:
    மாலையில் சூடாக ஏதாவது செய்து சாப்பிடலாம் என்று யோசனை இருந்தால் பாசிப் பருப்பு அல்வா செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாச சுவையில் தெகிட்ட தெகிட்ட சுவைக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பாசி பருப்பு - 3 கப்
    வெல்லம் - 1 1/2 கப்
    நெய் - 1 tsp
    முந்திரி - சிறிதளவு
    ஏலக்காய் பொடி - 1/2 tsp



    செய்முறை :

    3 கப் பாசி பருப்பை இட்லி தட்டில் நிரப்பிப் பாருங்கள். அதில் உள்ள நான்கு குழிகளிலும் சம அளவு நிரம்பும் அளவிற்காக பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். பின் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வையுங்கள்.

    கத்தரிக்காய் பிடிக்காதவர்களைக் கூட சாப்பிடத் தூண்டும் சுவையில் ’கத்தரிக்காய் வருவல்’ : செய்முறை இதோ...

    ஊறியதும் மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை தண்ணீர் ஊற்றி பிசைந்து வடை சுடும் பதத்திற்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    தற்போது பருப்பை வடைபோல் தட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்களுக்கு இட்லி குக்கரில் வேக வையுங்கள்.

    வெந்ததும் அவற்றை எடுத்து வெந்துள்ள மாவை உடைத்து தூளாக்கிக் கொள்ளுங்கள். கட்டிகள் இல்லாமல் இருக்க ஒரு முறை மிக்ஸியில் ஓட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை அப்படியே வைத்துவிட்டு கடாயில் வெல்லம் சேர்த்து உருக்கிக் கொள்ளுங்கள்.

    வெல்லம் பாகு பதத்திற்கு வர வேண்டும். வெல்லப் பாகு வந்ததும் அரைத்த பாசி பருப்பு மாவை சேர்த்து கிளறுங்கள். அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக்கொள்ளுங்கள். வெல்லம் நன்கு கலக்கும் வரை பிரட்டுங்கள்.

    இறுதியாக கடாய் வைத்து நெய் ஊற்றி முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து அதில் ஊற்றிக் கிளறுங்கள்.

    அவ்வளவுதான் பாசிபருப்பு அல்வா தயார்.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published: