பச்சை பயறு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், ஜீரண சக்தி அதிகரித்தல் என பல நன்மைகள் கிடைக்கும். இதை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிடலாம். வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை விட குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சை பயறு - 1 கப்
பூண்டு - 5
தக்காளி - 1
மஞ்சள் - 1 tbsp
வெங்காயம் - 2
தாளிக்க
எண்ணெய் - 2 tbsp
கடுகு - 1/4 tbsp
சீரகம் - 1/4
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
செய்முறை
பச்சை பயறை முதல் நாள் இரவு கழுவி ஊற வைக்கவும்.
மறுநாள் குக்கரில் பச்சை பயறு, தக்காளி, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்ததும் இறக்கி ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொறித்தபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு கருவேப்பிலையை உருவி போடவும்.
நன்கு வெங்காயத்தை வதக்கியதும் மசித்து வைத்துள்ள பயரைக் கொட்டிக் கிளறி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
நீர் கொஞ்சம் இறங்கியதும் தேவைக்கு ஏற்ப கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிடவும். ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு குழம்பு தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.