உடலுக்கு ஊட்டச்சத்து தரும் மொச்சைக் கொட்டை கூட்டு - எப்படி செய்வது..?

மொச்சைக் கொட்டை கூட்டு குழம்புக்கு தொட்டுக்கொள்ளவும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் அருமையான உணவு.

உடலுக்கு ஊட்டச்சத்து தரும் மொச்சைக் கொட்டை கூட்டு - எப்படி செய்வது..?
மொச்சைக் கொட்டை கூட்டு
  • Share this:
மொச்சைக் கொட்டை கூட்டு குழம்புக்கு தொட்டுக்கொள்ளவும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் அருமையான உணவு. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மொச்சை கொட்டை - 2 1/2 கப்


மஞ்சள் - 1/4 tsp
உப்பு - தே.அ

அரைக்க :தேங்காய் துருவியது - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1 tsp
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 1

தாளிக்க

எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
கறிவேப்பிலை - ஒரு ஸ்பிரிங்
வெங்காயம் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

இரவு மொச்சைக் கொட்டையை ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை தோல் தனியாக நீங்கிவிடும். அதை நீங்கள் சுத்தம் செய்து நீக்கிவிடுங்கள்.

பின் அதைக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள், உப்பு சேர்த்து 3 விசில் வரவிடுங்கள். வந்ததும் இறக்கிவிடுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

மாலையில் சூடாக செய்து சாப்பிடலாம் காலிஃப்ளவர் பஜ்ஜி : செய்முறை இதோ...

அரைத்ததும் அதை வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையில் சேர்த்து கலந்து சிறு தீ வைத்து கொதிக்க விடுங்கள்.

இறுதியாக தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதில் ஊற்றி கலந்து பரிமாறுங்கள்.

மொச்சைக் கொட்டை கூட்டு தயார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading