ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அரிசி மாவு இல்லாமல் இன்ஸ்டன்ட் தோசை எப்படி செய்வது தெரியுமா..? இதோ ரெசிபி

அரிசி மாவு இல்லாமல் இன்ஸ்டன்ட் தோசை எப்படி செய்வது தெரியுமா..? இதோ ரெசிபி

தோசை

தோசை

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை கொடுக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்த இன்ஸ்டன்ட் தோசை என்பது திணை வகைகளில் ஒன்றான சாமையில் செய்யப்படுவதாகும். சாமையில் பல வகையான நன்மைகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி குழந்தைகள் வரை கொடுக்கலாம். உடலுக்கு தேவையான ஆற்றலும் உள்ளது. கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சாமை - 1 கப்

தேங்காய் - 1 கப்

உப்பு - தே.அ

செய்முறை :

காலையில் தோசை சுட வேண்டும் எனில் இரவு தூங்கும் முன் சாமையை ஊற வைத்துவிடுங்கள்.

மறு நாள் காலை கழுவி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பும் கலந்துகொள்ளுங்கள்.

தோசை பதத்திற்கு ஏற்ப அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள். இட்லி எனில் தண்ணீர் குறைத்துக்கொள்ளுங்கள்.

சிக்கன் குழம்பு இப்படி வெச்சுப் பாருங்க..சும்மா வீடேமணக்கும்..!

அவ்வளவுதான் அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தோசை சுடலாம்.

இதற்கு வேர்க்கடலை சட்னி, கெட்டி சட்னி பொருத்தமாக இருக்கும்.

First published:

Tags: Dosa, Food