தேங்காய் போளி, பருப்பு போளி என சாப்பிட்ட நீங்கள் இப்படி பால் போளி செய்து சாப்பிட்டதுண்டா..? செய்து பாருங்கள் நாவில் ருசி நீங்காது.
தேவையான பொருட்கள் :
மைதா - 1/2 கப்,
ரவை - 1/2 tsp
நெய் - 1/2 tsp
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - பொறிப்பதற்கு ஏற்ப
பால் செய்வதற்கு தேவையான பொருட்கள்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 tsp
கற்பூரம் - ஒரு சிட்டிகை
பாதாம், முந்திரி - கை அளவு
குங்குமப் பூ - கொஞ்சம் (இருந்தால் )
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, நெய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அந்த இடைவேளையில் பாலை காய்ச்சி கொதி நிலை வந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பின் ஏலக்காய் பொடி, கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
15 நிமிடங்கள் கழித்து குறைந்த மாவு எடுத்து சிறிது சிறிதாக திரட்டி கொள்ளவும். பூரி செய்ய திரட்டுவது போல் திரட்டுங்கள். அதை எண்ணெயில் பூரி போல் வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின் அதில் எண்ணெய் நன்கு இறுகியதும் காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போட்டு விடவும். இறுதியாக நெய் காய்ச்சி பாதாம், முந்திரிகளை வறுத்தி அதில் போடவும். பிறகு குங்குமப்பூவும் சேர்த்துக் கொள்ளவும். சுவையான பால் போலி ரெடி.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.