• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • விநாயகர் சதுர்த்தி படையலில் வைக்க மொறு மொறு மெதுவடை : பஞ்சு போல் உப்பி வர டிப்ஸ்..!

விநாயகர் சதுர்த்தி படையலில் வைக்க மொறு மொறு மெதுவடை : பஞ்சு போல் உப்பி வர டிப்ஸ்..!

மொறு மொறு மெதுவடை

மொறு மொறு மெதுவடை

உளுந்து , பச்சை மிளகாய் போட்டு செய்யும் இதன் சுவையும் மணமும்..கடவுளை மட்டுமல்ல நம்மையும் சுண்டி இழுக்கும்.

  • Share this:
பண்டிகை நாட்களில் கடவுள் வழிபாட்டிற்கு முதலில் மெது வடைதான் வைத்து படைப்பார்கள். அது விநாயகர் சதுர்த்தியிலும் விதி விலக்கல்ல. உளுந்து , பச்சை மிளகாய் போட்டு செய்யும் இதன் சுவையும் மணமும்..கடவுளை மட்டுமல்ல நம்மையும் சுண்டி இழுக்கும். சரி எப்படி பஞ்சு போன்ற மெது வடை சுடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1கப்
பச்சை மிளகாய் -2
அரிசி - 1/2 ஸ்பூன்
பொட்டுக் கடலை வறுத்தது - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - வறுக்க



செய்முறை

உளுந்து மற்றும் அதோடு அரிசி, வறுத்த பொட்டுக் கடலை ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

1 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து அதோடு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள். (சிலர் மிளகும் இடித்து போடுவார்கள். தேவைப்பட்டால் போட்டுக்கொள்ளுங்கள்)

விநாயகர் சதுர்த்திக்கு பூ போன்ற மென்மையான கொழுக்கட்டை செய்ய மாவு இந்த பதத்தில்தான் கிண்ட வேண்டும்..!

கடாய் வைத்து வடை சுட எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். எண்ணெய் காய்ந்துவிட்டதை உறுதி செய்ய சிறு துளி மாவை போட்டுப் பாருங்கள். உப்பி பொறிந்து வந்தால் எண்ணெய் ரெடி

அடுத்து உள்ளங்கையில் தண்ணீரில் நனைத்து எலுமிச்சை அளவு மாவு எடுத்து தட்டுங்கள். வடை போல் வட்டமாக தட்டியதும் நடுவே ஒரு ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.

கையில் வரவில்லை எனில் பால் கவர் அல்லது வெற்றிலை, வாழை இலை பயன்படுத்தி தண்ணீர் தொட்டு வடை தட்டி கடாயில் போட்டால் நழுவிக்கொண்டு விழும்.

பின் அதை பொன்னிறமாக வறுத்து எடுங்கள். அவ்வளவுதான் மெது வடை தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: