முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெந்தய கீரையில் சப்பாத்தி செஞ்சுப்பாருங்க... ருசியாக இருக்கும்...

வெந்தய கீரையில் சப்பாத்தி செஞ்சுப்பாருங்க... ருசியாக இருக்கும்...

வெந்தய கீரை

வெந்தய கீரை

வெந்தயக் கீரையை அப்படியே கீரையாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. விதவிதமாகவும் சமைத்து சாப்பிடலாம். அப்படியொரு உணவான வெந்தயச் சப்பாத்தி செய்யும் முறையை தெரிந்துகொள்ளலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயக் கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடல் சூடு குறையும், மலச்சிக்கல் பிரச்னை குறையும், ரத்தத்தை சுத்தமாக்க உதவும், தோல் நோய்களின் தீவிரம் குறையும், வாயு கோளாறு சரியாகும். இத்தனை நன்மைகளை தரும் இந்த கீரையில் சப்பாத்தி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்

வெந்தய கீரை - 2 கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)

உப்பு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

எண்ணைய் - 2 ஸ்பூன் (மாவு பிசையும் போது பயன்படுத்த)

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

சீரகம் அல்லது ஓமம் - 1/2 ஸ்பூன்

வெந்தய சப்பாத்தி

செய்முறை:

1. மேலே சொல்லப்பட்ட எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.

2. தேவையான அளவு தண்ணீர் தெளித்து, சாதாரண சப்பாத்தி செய்வது போல மிருதுவாக மாவை பிசையவும்.

3. பின்னர் வழக்கமான சப்பாத்தி போல, கொஞ்சமாக எண்ணெய் விட்டு, தோசைக் கல்லில் சுட்டு எடுக்கவும்.

4. சுடச்சுட வெந்தயச் சப்பாத்தி தயார். வெந்தயக் கீரையை வைத்து சப்பாத்தி செய்வது போல பரோட்டாவும் செய்யலாம்.

First published:

Tags: Chapati, Methi Chappathi