• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கருப்பு உளுந்து மெது வடை சாப்பிட்டிருக்கீங்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

கருப்பு உளுந்து மெது வடை சாப்பிட்டிருக்கீங்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

கருப்பு உளுந்து மெது வடை

கருப்பு உளுந்து மெது வடை

பெண்கள் மட்டுமன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுக்கலாம்.

  • Share this:
கருப்பு உளுந்து பெண்களுக்கான நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கருப்பைக்கு ஆரோக்கியம் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் மட்டுமன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடுக்கலாம். எனவே அதில் எப்படி வடை சுடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து – 200 கிராம்
கவுனி அரிசி – 20 கிராம்
கடலை எண்ணெய் – வறுக்க
சின்ன வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 2
மிளகு – 2 tsp
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு



செய்முறை :

கருப்பு உளுந்து 8 முதல் 20 மணி நேரம் ஊற வேண்டும் எனவே இரவே ஊற வைத்துவிடுங்கள். ஊற வைக்கும் முன் நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும்.

அரிசி மூன்று மணி நேரம் ஊறினால் போதும்.

ஊறிய உளுந்தை மொது வடைக்கு மாவு அரைப்பதுபோல் கெட்டியான பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் கவுனி அரிசியையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

தயிர், சாம்பார் என எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ள மொறு மொறு வெண்டைக்காய் வறுவல் : நொடியில் செய்ய ரெசிபி

மாவு தயாரானது, எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்துக்கொள்ளுங்கள். மிளகை இடித்து போட வேண்டும். கறிவேப்பிலை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அவற்றை நன்கு கலந்துக்கொள்ளவும்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மெது வடை சுடுவதுபோல் தட்டி நடுவே ஓட்டை போட்டு எண்ணெயில் லாவகமாக போட்டு சிறிது நேரம் கழித்து மறுபுறம் பிரட்டி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிட வேண்டும்.

இப்படி அனைத்து மாவையும் போட்டு எடுத்தால் கருப்பு உளுந்து வடை தயார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: