காய்கறிகளே இல்லாத போது செய்து பாருங்கள் ’மசால்வடை குழம்பு’ - ரெசிபி இதோ...

”எந்த காய்கறிகளும் ஏன் தக்காளி கூட இந்த குழம்புக்கு தேவையில்லை”

காய்கறிகளே இல்லாத போது செய்து பாருங்கள் ’மசால்வடை குழம்பு’ - ரெசிபி இதோ...
மசால்வடை குழம்பு
  • Share this:
காய்கறி இல்லாத சமையத்தில் இப்படி மசால் வடைக் குழம்பு செய்து சாப்பிடுங்கள். அருமையான சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மசால் வடை - 5


படிக்க: மொறுமொறு சுவையில் மசால் வடை.. சூப்பராக செய்வதற்கு இதோ ரெசிபி...!

வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1மஞ்சள் - 1/2 tsp
தேங்காய் - 1/2 கப்
மல்லித் தூள் 2 tsp
மிளகாய் தூள் - 1 tsp
முந்திரி - 3
இஞ்சி - 1 துண்டு
சோம்பு - 1 tsp
கிராம்பு - 2
மிளகாய் - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் /உப்பு - தே.அசெய்முறை :

மசால்வடையை தயாராக செய்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது கடையில் கூட வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். பின் முந்திரி, கிராம்பு, சோம்பு சேர்த்து பொரியுங்கள். அதோடு துருவிய தேங்காயும் சேர்த்து வதக்கி ஆற வையுங்கள். இதை மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும் வெங்காயத்தாள் பொரியல் : எப்படி செய்வது ?

அடுத்ததாக மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை சேருங்கள். பின் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்குங்கள். தற்போது அரைத்த தேங்காய் பேஸ்டை கொட்டி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள்.

ஒரு கொதி வந்ததும் மசால் வடையை சேர்த்து கொதிக்கவிடுங்கள். கொதித்து தேவையான அளவு குழம்பு வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான மசால்வடை குழம்பு தயார்.

 

 
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading