மொறுமொறு சுவையில் மசால் வடை.. சூப்பராக செய்வதற்கு இதோ ரெசிபி...!

மொறுமொறுவென மசால் வடை சுடுவதில் சில ட்ரிக்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.

மொறுமொறு சுவையில் மசால் வடை.. சூப்பராக செய்வதற்கு இதோ ரெசிபி...!
மசால் வடை
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 5:15 PM IST
  • Share this:
மசால் வடை, டீ டைமிற்கு உகந்த ஸ்னாக்ஸ். சிலருக்கு மசால் வடை சுட தெரிந்தாலும் மொறுமொறுவென சுடுவதில் சில ட்ரிக்ஸ் இருப்பது தெரிவதில்லை. அது எப்படி என தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு - 1 கப்


உப்பு - தே. அளவு
பட்டை - 1 இஞ்ச்
காய்ந்த மிளகாய் - 2சீரகம் - 3/4 tsp
சோம்பு - 3/4 tsp
வெங்காயம் - 1
புதினா - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 1 ஸ்பிரிங்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/4
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் - 1 சிட்டிகை
எண்ணெய் வறுக்கசெய்முறை :

கடலைப் பருப்பை 1 .1/2 மணி நேரம் ஊற வைத்தால் போதும் அப்போதுதான் வடை மொறுமொறுவென வரும். ஊறியதும் தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.

பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக ஊறவைத்த கடலை பருப்பு உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள்.

மாவு மைய இல்லாமல் மொறப்பாக அரைக்கவும். ஒரு சில கடலைப் பருப்புகள் அப்படியே இருக்க வேண்டும்.

தற்போது அரைத்த மாவை அகல பாத்திரத்தில் போடவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா,இஞ்சி பூண்டு பேஸ்ட் என அனைத்தையும் போட்டு பிசையுங்கள்.

படிக்க: முட்டை உடையாமல் பதமாக எப்படி வேக வைக்கனும் தெரியுமா..?

கொஞ்சம் வாயில் வைத்து உப்பு சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளவும். தற்போது கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வையுங்கள்.

அடுத்ததாக உள்ளங்கையில் தண்ணீர் நனைத்து ,சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வட்டமாகத் தட்டி அப்படியே லாவகமாக எண்ணெய் கடாயில் போடவும்.

இப்படி ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மசால் வடை தயார்.

 
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading