• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாங்கா விரும்பிகளுக்கு பிடித்த ‘மாங்காய் சர்பத்’ - புளிப்பும்.. இனிப்பும் கலந்த சுவையில் அட்டகாசமாக இருக்கும்..!

மாங்கா விரும்பிகளுக்கு பிடித்த ‘மாங்காய் சர்பத்’ - புளிப்பும்.. இனிப்பும் கலந்த சுவையில் அட்டகாசமாக இருக்கும்..!

மாங்காய் சர்பத்

மாங்காய் சர்பத்

புளிப்பு, உடல் சூடு என எத்தனை சொன்னாலும் அதன் பெயரைக் கேட்டாலே ருசி பார்க்க எச்சில் ஊறும்.

  • Share this:
கோடைகாலம் என்றாலே முதலில் எதிர்பார்ப்பது மாங்காய் தான். புளிப்பு, உடல் சூடு என எத்தனை சொன்னாலும் அதன் பெயரைக் கேட்டாலே ருசி பார்க்க எச்சில் ஊறும். அப்படி நீங்களும் மாங்காய் பிரியர் எனில் இந்த மாங்காய் சர்பத் உங்களுக்கான ரெசிபி தான். எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

மாங்காய் – 2
சர்க்கரை – தேவையான அளவு
உப்பு
சீரகத்தூள் – 1ஸ்பூன்

பஞ்சாபி ஸ்டைலில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? கோடை காலத்திற்கு மிகவும் நல்லது..!



செய்முறை :

முதலில் மாங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய மாங்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மாங்காய் வெந்து வரும் போது சீரகத்தூள் , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இறக்கவும். ஒரு கரண்டி மாங்காய் பாகு உடன் ஐஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். சுவையான மாங்காய் சர்பத் வித்தியாசமான சுவையில் கோடைக்கால விருந்தாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: