• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புத்துணர்ச்சி அளிக்கும் மேங்கோ லஸ்ஸி!

புத்துணர்ச்சி அளிக்கும் மேங்கோ லஸ்ஸி!

மேங்கோ லஸ்ஸி

மேங்கோ லஸ்ஸி

  • News18
  • Last Updated :
  • Share this:
    மேங்கோ லஸ்ஸி வெறும் தாகத்திற்கு மட்டுமல்ல... அதன் சுவையும், வாசனையும் நம்மை புத்துணர்ச்சியாக்கி   எனர்ஜியைக் கொடுக்கக் கூடியது. தற்போது மேங்கோ சீசன் என்பதால் மேங்கோ லஸ்ஸிதான் பலரின் விருப்ப பானமாக இருக்கிறது. இதை வீட்டிலும் செய்து குடிக்கலாம்.  

    தேவையான பொருட்கள்:

    மாம்பழம் - 1
    தயிர் - 1 கப்
    பால் - 1/3 கப்
    ஐஸ் கட்டித் தூள் - 1 கப்
    ரோஸ் வாட்டர் - 1 tbsp
    பாதாம் - 1 tbsp
    டூட்டி ஃப்ரூட்டி - 1 tbsp
    சர்க்கரை - 3 tbsp
    மேங்கோ ஐஸ்க்ரீம் - 1 கப்



    செய்முறை :

    மாம்பழத்தில் உள்ள சதைகளை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

    புளிப்பு இல்லாத புது தயிரை நன்றாக அடித்துக்கொள்ளவும்.
    தற்போது பாம்பழ சதையை மிக்ஸியில் நன்கு அடித்துக்கொள்ளவும். தற்போது சர்க்கரை, பால் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்றாக அடித்துக்கொள்ளவும்.

    அடுத்ததாக தயிர் சேர்க்கவும். அதோடு ஐஸ்கட்டி, ரோஸ் வாட்டர் சேர்த்து மீண்டும் நன்றாக ஓட்டவும்.

    தற்போது அதை ஒரு கிளாசில் ஊற்றி மேங்கோ ஐஸ்கிரீம் ஸ்கூப்பை அதன் மேல் பதமாக வைக்கவும்.

    பின் டூட்டி ஃப்ரூட்டியை தூவி, உடைத்த பாதாம் பருப்பையும் தூவவும். சுவையான மேங்கோ லஸ்ஸி தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: