• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஜில் ஜில் கூல் கூல் மாம்பழம் கீர்..! எப்படி செய்யனும் தெரியுமா..?

ஜில் ஜில் கூல் கூல் மாம்பழம் கீர்..! எப்படி செய்யனும் தெரியுமா..?

மாம்பழம் கீர்

மாம்பழம் கீர்

வெறுமனே சாப்பிடாமல் இப்படி வகை வகையாக செய்து ருசியாக சாப்பிடுங்கள்.

  • Share this:
    கோடைக்காலத்தில் மாம்பழத்தின் வரவு களைகட்டும். இனி எந்த வீடும் மாம்பழம் இல்லாமல் இருக்காது. அதை வெறுமனே சாப்பிடாமல் இப்படி வகை வகையாக செய்து ருசியாக சாப்பிடுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    பழுத்த மாம்பழம் - 2
    ஊற வைத்த சியா விதை - 1/2 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    பால் - 1 1/2 கப்
    சர்க்கரை - 1/3 கப்
    பாதாம் - தே. அளவு



    செய்முறை :

    இரவு தூங்கும் முன்பே சியா விதைகளை ஊற வைத்துக்கொள்ளுங்கள். ( குறிப்பு : சியா விதை இல்லை என்றாலும் ஜவ்வரிசியை ஊற வைத்து வேக வைத்து குளிர்ந்தபின் போடலாம்)

    மறுநாள் மாம்பழ சதைகளை எடுத்து மிக்ஸியில் பால் 2 ஸ்பூன் ஊற்றி கெட்டி பதத்தில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக கிளாஸில் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊற வைத்துள்ள சியா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் பால் கொஞ்சம் ஊற்றுங்கள். அதன் மேல் அரைத்த மாம்பழம் ஊற்றுங்கள். மீண்டும் அதன் மேல் பால் ஊற்றுங்கள்.

    மீண்டும் அதன் மேல் சிறு துண்டுகளாக நறுக்கிய மாம்பழங்களை போடுங்கள். மேலே உடைத்த பாதாமை தூவுங்கள்.

    அவ்வளவுதான் கூலான மாம்பழம் கீர் தயார். அதை அப்படியே ஸ்பூன் பயன்படுத்தி ஜில்லென சுவைக்கலாம். குளுர்ச்சி வேண்டும் என்றால் கொஞ்ச நேரம் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: