வீட்டில் மாம்பழம் நிறைய இருக்கா..உடனே இதை செஞ்சு பாருங்க..!

கோடைக்காலத்தின் விருந்தாளி மாம்பழம்.

வீட்டில் மாம்பழம் நிறைய இருக்கா..உடனே இதை செஞ்சு பாருங்க..!
மாம்பழம்
  • News18
  • Last Updated: June 15, 2019, 10:01 PM IST
  • Share this:
கோடைக்காலத்தின் விருந்தாளி மாம்பழம். அனைவரின் வீடுகளிலும் மாம்பழத்திற்குப் பஞ்சம் இருக்காது. உங்கள் வீட்டிலும் இருந்தால் செய்து பாருங்கள் மாம்பழம் கேசரி.

தேவையான பொருட்கள்

முழு மாம்பழம் - 1


நெய் - 2 ஸ்பூன்
முந்திரி - கால் கப்
திராட்சை - சிறிதளவுரவை - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் ( தேவைக்கு ஏற்ப)
ஏலக்காய் - சிறிதளவு
தண்ணீர் - 2 கப்செய்முறை

மாம்பழத்தில் உள்ள தோளை மட்டும் நீக்கி குழைத்துக்கொள்ளுங்கள்.

கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி , திராட்சையைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். பின் ரவை சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். பொன்னிறமாக மாறும்போதே அடுப்பை அணைத்துவிடுங்கள்.

கடாயில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பின் தண்ணீர் ஊற்றி அதோடு ஏலக்காய் பொடி சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவையைக் கொட்டிக் கிளறவும்.

ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன் மாம்பழச் சதையைக் கொட்டிக் கிளறி இறக்கிவிடவும்.
சுவையான கமகம மாம்பழம் கேசரி தயார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading