Home /News /lifestyle /

கடாயில் மிச்சமில்லாமல் தீர்ந்துபோகும் மாங்காய் பச்சடி தித்திப்பு: எப்படி செய்வது..?

கடாயில் மிச்சமில்லாமல் தீர்ந்துபோகும் மாங்காய் பச்சடி தித்திப்பு: எப்படி செய்வது..?

மாங்காய் தித்திப்பு

மாங்காய் தித்திப்பு

மாங்காய் இருந்தால் வெல்லம் போட்டு தித்திப்பு செய்து பாருங்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிச்சம் வைக்காமல் வழித்து சாப்பிடுவார்கள்.

    மாங்காய் இருந்தால் வெல்லம் போட்டு தித்திப்பு செய்து பாருங்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள் :

    மாங்காய் - 1
    வெல்லம் - 1/3 கப்
    தண்ணீர் - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 2
    கடுகு - 1 tsp
    உளுத்தம் பருப்பு - 1 tsp
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தே. அளவு

    தினமும் ஒரு வெங்காயம் சாப்பிட்டாலே இவ்வளவு நன்மைகளை பெறலாமா..?



    செய்முறை :

    மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து மாங்காய் போட்டு தண்ணிர் ஊற்றி வேக வையுங்கள். அதேசமயம் மற்றொரு கடாயில் வெல்லம் உடைத்துக்கொட்டி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உருக வையுங்கள்.

    மாங்காய் வெந்ததும் அதில் மஞ்சள் உப்பு சேர்த்து கிளறுங்கள். பின் உருகிய வெல்லத்தை போட்டு பிரட்டுங்கள்.

    கடையில் தயிர் வாங்குவதை விட வீட்டிலேயே ஃபிரெஷாக தயாரிக்கலாம் : எப்படி செய்வது?

    5 நிமிடங்களுக்கு கிளறிக்கொண்டே இருங்கள். அப்போதுதான் வெல்லம் , மாங்காய் நன்கு கலவையாக மாறும். மாங்காய் கூழ் போல் ஆக்கிவிடாதீர்கள். எனவே பக்குவமாக கிளறுங்கள்.

    முடிந்ததும் தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிந்ததும் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி கொதிக்கும் மாங்காயில் கொட்டுங்கள். தற்போது அதோடு சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி