• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கோடையில் களைகட்டும் மாங்காய்..! இதை வைத்து சட்னி எப்படி செய்யுறது தெரியுமா?

கோடையில் களைகட்டும் மாங்காய்..! இதை வைத்து சட்னி எப்படி செய்யுறது தெரியுமா?

மாங்காய் சட்னி

மாங்காய் சட்னி

கர்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி வருவது குறையும்.

  • Share this:
    கோடையில் களைகட்டும் மாங்காய் பலரின் ஃபேவரைட். இதை வைத்து எந்த மாதிரியான சுவையிலும் நாவுக்கு விருந்து வைக்கலாம். அந்த வகையில் மாங்காய் சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள்: 

    துருவிய தேங்காய் – ஒரு கப்

    தோல் நீக்கி வெட்டிய மாங்காய் – 4 துண்டுகள்

    இஞ்சி- சிறிய துண்டு

    பூண்டு - 2 பல்

    பச்சை மிளகாய் (பெரியது) – ஒன்று

    தாளிக்க கடுகு – கால் டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

    கறிவேப்பிலை – சிறிது

    உப்பு – தேவையான அளவு



    செய்முறை:

    மாங்காயை  நன்றாக கழுவி சிறு  துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

    அத்துடன் தேங்காயையும் எடுத்து துருவிக்கொள்ள வேண்டும்.

    அதன்பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மாங்காய், தேங்காய், உப்பு ஆகியவற்றை  சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

    அதன்பின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

    இப்போது புளிப்பான மாங்காய் சட்னி ரெடி. இது கர்பிணிகள் சாப்பிட்டால் வாந்தி  வருவது குறையும்.

    பார்க்க :

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: