குளுகுளு மலாய் குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி?

மலாய் குல்பி

குல்பி ஐஸ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மலாய் குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்

  • Share this:
    வெயில் காலத்தில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது ஐஸ் கிரீம்தான். அதிலும் குல்பி ஐஸ் என்றாலே நம் ஒவ்வொருத்தருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் இன்று மலாய் குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்பதை  பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்: 

    பால் - 1 லிட்டர்

    கார்ன் ஃபிளார் - 50 கிராம்

    சர்க்கரை - 1 கப்

    கிரீம் - 1 கப்

    ரோஸ் எசென்ஸ் - 6 துளி

    ஏலக்காய் பொடி - சிறிதளவு

    முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவைக்கேற்ப

    செய்முறை:

    முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாலை காய்ச்சி பாதியளவு பாலை எடுத்து அதில் கார்ன் ஃபிளாரை சேர்த்து கட்டியாக கரைக்க வேண்டும். மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.

    அதன்பிறகு  இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்சியில் போட்டு அடிக்க வேண்டும். அரைத்த விழுதுடன் கிரீம், ரோஸ் எசன்ஸ், ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து குல்பி மோல்டில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும். அல்லது வீட்டில் இருக்கும் சாதாரண சில்வர் டம்ளடிலேயே வைக்கலாம். 6 மணி நேரம் கழித்து கெட்டியானதும் எடுத்து பார்த்தால் குளுகுளு மலாய் குல்பி ரெடி. இதை சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: