மேகி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு என்பதால் இப்படி வித்யாசமான சுவையில் செய்து கொடுப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
மேகி - 1 பாக்கெட்
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை பட்டாணி - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கரம் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தே. அளவு
கடலை மாவு - ஒரு கப்
எண்ணெய் - வறுக்க
செய்முறை :
கேரட்டை சீவிக்கொள்ளுங்கள். பட்டாணியை தண்ணீரில் போட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள். மேகியை சுடு தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
மேகி ஆறியதும் அதில் மிக்ஸ் செய்ய கொடுத்திருக்கும் பொருட்களை சேர்த்து லாவகமாக பிசைந்துகொள்ளவும். அதில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு போட்டுக்கொள்ளவும். பதமாக பிசையவும். மேகி குழைந்துவிடும்.
பின் அவற்றை உங்களுக்குத் தேவையான உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். இப்படி ஒவ்வொன்றாக செய்து வைத்துக்கொள்ளவும்.
கடலை மாவை கொஞ்சம் கெட்டியான தண்ணீர் பதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். தற்போது எண்ணெய் கடாயில் ஊற்றி காய வைத்துக்கொள்ளுங்கள்.
காய்ந்ததும் உருண்டைகளை அரிசி மாவில் முக்கி எடுத்து அதை அப்படியே எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். பொறிக்கும்போது மெதுவாக இரு பக்கங்களும் பிரட்டி எடுக்கவும். உருண்டை உடையாமல் பார்த்துக்கொள்ளவும்.
இதற்கு டொமேட்டோ சாஸ் அல்லது போண்டாவுக்கு சட்னி போல் செய்து தொட்டுக்கொள்ளலாம்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.