மேகி ஆம்லெட் ரெசிபி : காலை உணவிற்கு ஈசியாக செய்து சாப்பிடலாம்

மேகி ஆம்லெட் ரெசிபி : காலை உணவிற்கு ஈசியாக செய்து சாப்பிடலாம்
மேகி ஆம்லெட்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 3:53 PM IST
  • Share this:
வாய்க்கு ருசியாக ஏதாவது செய்துகொடுங்கள் என்று குழந்தைகள் கேட்டால் அவர்களுக்கு பிடித்த சுவையில் இப்படி மேகி ஆம்லெட் செய்து கொடுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மேகி பாக்கெட் - 1


ஆம்லெட் செய்ய

முட்டை - 2
தக்காளி - 1 tbspவெங்காயம் - 1 tbsp
உப்பு - சிறிதளவு
மஞ்சள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

முதலில் மேகியை கடாயில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும்.

தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.

முட்டை உடைத்து ஊற்றி மற்ற பொருட்களை சேர்த்து நன்கு அடித்துக் கலக்குங்கள். பின் தவா வைத்து எண்ணெய் விட்டு முட்டையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்துக்கொள்ளுங்கள்.

சப்பாத்தி தோசைக்கு பொருத்தமான முட்டை ஆம்லெட் கிரேவி.. இரவு உணவை எளிதாக்குங்கள்.. ரெசிப்பி இதோ..

பின் அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.

பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது.

மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும்.

அவ்வளவுதான் மேகி ஆம்லெட் தயார்.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading