HOME»NEWS»LIFESTYLE»food how to make macaroni masala for kids favourite esr

குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் மக்ரூனியை வைத்து அருமையான டிஷ்..! ரெசிபி இதோ...

ஆரோக்கியமான வழியில் செய்ய கேரட் , பட்டானி வகைகளையும் சேர்க்கலாம்.

குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் மக்ரூனியை வைத்து அருமையான டிஷ்..! ரெசிபி இதோ...
மக்ரூனி மசாலா
  • Share this:

காலை உணவு அல்லது இரவு உணவுக்கு குழந்தைகளுக்கு மக்ரூனியில் காரசார சுவையுடன் மக்ரூனி மசாலா செய்து கொடுங்கள். அதில் ஆரோக்கியமான வழியில் செய்ய கேரட் , பட்டானி வகைகளையும் சேர்க்கலாம். எப்படி செய்வது என பார்க்கலாம்..!

தேவையான பொருட்கள் :

மக்ரூன் - 1 கப்
இஞ்சி - 1 tsp
பூண்டு - 1 tsp
எண்ணெய் - 4 tbp
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
கோஸ் - 1/2 கப்
தக்காளி - 1
பச்சை பட்டாணி - 1கப்
உப்பு - தே.அ
மஞ்சள் - 1/2 tsp
மேகி மசாலா - 1 tsp
கரம் மசாலா - 1 tsp
ரெட் சில்லி சாஸ் - 1 tsp
டொமேட்டோ சாஸ் - 2 tsp
கொத்தமல்லி - சிறிதளவு





செய்முறை :

மக்ரூனியை தண்ணீரில் போட்டு வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். கண்ணாடி போல் வதங்கியதும் குடைமிளகா சேர்த்து வதக்குங்கள். பின் கோஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.

குண்டானில் வடித்த சாதம் போல் குக்கரில் வடிக்கும் சாதமும் உதிரியாக இருக்க வேண்டுமா..? சூப்பரான டிப்ஸ் இதோ

காய்கறி வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். தக்காளி குழைந்ததும் பச்சைபட்டானி மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிடுகள்.

அடுத்ததாக மஞ்சள், மேகி மசாலா, கரம் மசாலா சேர்த்து பிரட்டியதும் சாஸ் வகைகளை சேருகள்.

அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மசாலா வந்ததும் வேக வைத்த மக்ரூனியை சேர்த்து பிரட்டுங்கள். மக்ரூனியில் மசாலா நன்கு கலக்குமாறு பிரட்டுங்கள்.

இறக்கும்போது கொத்தமல்லி தழை அல்லது ஸ்பிரிங் ஆனியன் இருந்தால் தூவி விடுகள்.

அவ்வளவுதான் மக்ருனி மசாலா தயார்.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: