வெண்டைக்காயில் இப்படி ஒரு டிஷ் செய்து பாருங்கள்.. ருசியில் மெய் மறந்து போவீர்கள்..!

வெண்டைக்காயில் இப்படி ஒரு டிஷ் செய்து பாருங்கள்.. ருசியில் மெய் மறந்து போவீர்கள்..!

வெண்டைக்காய் டிஷ்

சப்பாத்திக்கும் சூப்பர் டிஷாக இருக்கும்.

 • Share this:
  காரசார சுவையில் மசாலா வாசனையுடன் செய்யும் இந்த வெண்டைக்காய் டிஷ் மதிய உணவுக்கு தொட்டுக்கொள்ளலாம். அதோடு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  வெண்டைக்காய் - 500 கிராம்
  வெங்காயம் - 1
  தக்காளி - 1
  இஞ்சி - 1 துண்டு
  மிளகாய் பொடி - 1 tsp
  தனியா பொடி - 1 tsp
  தயிர் - 1 கப்
  கடலை மாவு -1 tsp

  மசாலா தயாரிக்க :

  சோம்பு - 1 tsp
  சீரகம் - 1 tsp
  கடுகு - 1 tsp
  ஓமம் - 1 tsp
  காய்ந்த மிளகாய் - 3
  வெந்தயம் - 1 tsp  செய்முறை :

  மசாலா தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  பின் வெண்டைக்காயின் பிசுபிசுப்புத் தன்மை போக கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

  பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் மிளகாஉ பொடி, தனியா பொடி, சேர்த்து வதக்கவும்.

  குடைமிளகாய் முந்திரி போட்ட வேர்க்கடலை மசாலா : இதை அப்படியேவும் சாப்பிடலாம்..உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்..!

  அடுத்ததாக தயிர் மற்றும் கடலை மாவு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் வெண்டைக்காய் சேர்த்து பிரட்டவும். அதோடு அரைத்த மசாலாவையும் சேர்த்து 3/4 தண்ணீர் ஊற்றி பிரட்டவும்.போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.

  தட்டுபோட்டு மூடி 3 நிமிடம் மசாலா சேர கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் வெண்டைக்காய் ஸ்பெஷல் டிஷ் தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: