Home /News /lifestyle /

தயிர், சாம்பார் என எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ள மொறு மொறு வெண்டைக்காய் வறுவல் : நொடியில் செய்ய ரெசிபி

தயிர், சாம்பார் என எந்த உணவுக்கும் தொட்டுக்கொள்ள மொறு மொறு வெண்டைக்காய் வறுவல் : நொடியில் செய்ய ரெசிபி

மொறு மொறு வெண்டைக்காய் வறுவல்

மொறு மொறு வெண்டைக்காய் வறுவல்

இப்படி மொறு மொறுவென வறுவல் செய்து வைத்தால் போதும். தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

சாம்பார், கூட்டு, தயிர் சாதம் என எந்த உணவு வகைகளுக்கு வெண்டைக்காயை இப்படி மொறு மொறுவென வறுவல் செய்து வைத்தால் போதும். தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 25
கடலை மாவு - 2 tsp
அரிசி மாவு - 1 tsp
சோள மாவு - 1 tsp
மிளகாய் தூள் - 1 1/2 tsp
கரம் மசலா - 1 tsp
மிளகுத்தூள் - 1/2 tsp
உப்பு - தே.அ
எண்ணெய் - வறுக்க



செய்முறை :

வெண்டைக்காய்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பின் அவற்றை இரண்டாக நறுக்கி நீள வாக்கில் சிப்ஸ் போல் நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் வெண்டைக்காயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு என கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் சேருங்கள்.

இப்படி கூட அடை தோசை மாவு அரைக்கலாமா..? மொறு மொறுனு வர இதுதான் காரணமா..?

பின் சில துளி நீர் தெளித்து மசாலா சேருமாறு பிசைந்துகொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெண்டைக்காயை தூவி விட்டு பொன்னிறமாக பொறித்து எடுங்கள்.

அவ்வளவுதான் வெண்டைக்காய் வறுவல் தயார்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Food recipes, Ladies finger

அடுத்த செய்தி