Home /News /lifestyle /

கோவில்பட்டி சிக்கன் குழம்பு சாப்பிட்டிருக்கீங்களா..? அசத்தல் சுவையில் வீட்டில் செஞ்சு பாருங்க ..!

கோவில்பட்டி சிக்கன் குழம்பு சாப்பிட்டிருக்கீங்களா..? அசத்தல் சுவையில் வீட்டில் செஞ்சு பாருங்க ..!

கோவில்பட்டி சிக்கன் குழம்பு

கோவில்பட்டி சிக்கன் குழம்பு

காரசார சுவையில் அசத்தலாக கோவில்பட்டி சிக்கன் குழம்பு செய்ய ரெசிபி இதோ...

    கோவில்பட்டி சிக்கன் குழம்பு என்றாலே தனித்துமான சுவை கொண்டது. காரமான சுவையில் வாயில் வைத்ததுமே சுவை ஒட்டிக்கொள்ளும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    எண்ணெய் - 3 tbsp
    பிரிஞ்சு இலை - 1
    பட்டை - 1/2 துண்டு
    சோம்பு - 1/2 tsp
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மிளகாய் பொடி - 1 tbsp
    தனியா பொடி - 2 tbsp
    மிளகு பொடி - 1 tbsp
    சீரகப் பொடி - 1 tsp
    கரம் மசாலா - ஒரு சிட்டிகை
    நல்லெண்ணெய் - 3 துளிகள்



    அரைக்க :

    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 8 பற்கள்
    பச்சை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 6

    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருளை அரைத்துக்கொள்ளுங்கள். கடா வைத்து எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சு இலை, பட்டை, சோம்பு சேர்த்து வதக்குங்கள்.

    பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்குங்கள். பின் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்கள்.

    அடுத்ததாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    15 நிமிடத்தில் கமகமக்கும் இன்ஸ்டன்ட் சாம்பார் : குக்கரில் எப்படி செய்வது?

    பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலந்ததும் சிக்கனை சேர்த்து பிரட்டுங்கள். சிக்கன் வேகும் வரை 15 நிமிடங்கள் தட்டு போட்டு வேக வையுங்கள்.

    வெந்ததும் மீண்டும் 2 நிமிடங்களுக்கு சிறு தீ வைத்து கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடுங்கள்.  அவ்வளவுதான் கோவில்பட்டி சிக்கன் குழம்பு தயார்.
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி