ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காலை உணவை ஹெல்தியாக மாற்றும் வேர்க்கடலை கிச்சடி.. கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் காலியாகும்...

காலை உணவை ஹெல்தியாக மாற்றும் வேர்க்கடலை கிச்சடி.. கொஞ்சம் கூட மிச்சமில்லாமல் காலியாகும்...

கிச்சடி

கிச்சடி

காலை உணவுதான் மொத்த நாளுக்கான ஆற்றலை தருகிறது. எனவே சுவையும், மணமும் சேர்த்து உங்களை உற்சாகத் துள்ளல் போட வைக்கும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காலை உணவுக்கு என்ன செய்வதென்று யோசித்து செய்து முடிப்பதே பெரிய டாஸ்க்தான். ஏனெனில் காலை உணவே சரியாக இல்லை எனில் அன்றைய நாளே ஓடாது. எனவே அந்த காலை உணவுதான் மொத்த நாளுக்கான ஆற்றலை தருகிறது. எனவே சுவையும், மணமும் சேர்த்து உங்களை உற்சாகத் துள்ளல் போட வைக்கும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க...

  தேவையான பொருட்கள் :

  பச்சரிசி - 1 கப்

  வேர்க்கடலை - 1/2 கப்

  வெங்காயம் - 2

  பச்சை மிளகாய் - 4

  கேரட் - 1

  பச்சை பட்டாணி - 1/4 கப்

  கடுகு - 1/2 tsp

  சீரகம் - 1/2 tsp

  கறிவேப்பிலை - 1 கொத்து

  மஞ்சள் தூள் - 1/4 tsp

  நெய் - 1 tbsp

  கடலை பருப்பு - 1 tsp

  முந்திரி - 6

  எண்ணெய் -1 tbsp

  உப்பு - 1 tsp

  எலுமிச்சை - பாதி

  செய்முறை :

  முதலில் பச்சரிசியை கழுவி காய வையுங்கள். ஈரம் கொஞ்சம் வற்றியதும் கடாயில் ஈரப்பதம் நீங்கும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் வேர்க்கடலையையும் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  இரண்டும் சூடு தணிந்ததும் மிக்ஸி ஜாரில் ஒன்றும் பாதியுமாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் பொறிக்கவும்.

  பின் கடலை பருப்பு , முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

  கேரட் தோலை வச்சு இத்தனை விஷயம் பண்ணலாமா..? இனி தோலை தூக்கிப் போடமாட்டீங்க...

  வதங்கியதும் மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். காய்கறி வெந்ததும் அரைத்த அரிசியை சேர்த்து கிளறி விடவும்.

  போதுமான உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு 5 நிமிடங்கள் தட்டு போட்டு மூடவும்.

  5 நிமிடங்கள் கழித்து திறக்க தண்ணீர் வற்றி நன்கு வெந்திருக்கும். அவ்வளவுதான் அடுப்பை அணைத்துவிட்டு சுட சுட பரிமாறவும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Breakfast, Food recipes