• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன் : எளிமையான முறையில் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன் : எளிமையான முறையில் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்

கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்

அடுத்ததாக ஒரு அகலமான கிண்ணத்தில் சிக்கன் கோட்டிங் அதாவது மாவை சிக்கன் மீது பிரட்ட கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

  • Share this:
    கே.எஃப்.சி சிக்கனை இந்த லாக்டவுன் சமயத்தில் சாப்பிட முடியாமல் தவிக்கிறீர்கள் எனில் உங்களுக்காகவே இந்த ரெசிபி. வீட்டிலேயே கே.எஃப்.சி ஸ்டைலில் சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    எலும்பு இல்லாத சிக்கன் துண்டு - 250 கிராம்

    அரைக்க :

    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 2 பற்கள்
    வெங்காயம் - 1 துண்டு

    ஊற வைக்க

    தயிர் - 1 கப்
    முட்டை - 2
    உப்பு - 1 tsp
    மிளகாய் தூள் - 1 tsp
    மிளகு - சிறிதளவு

    மாவு பிறட்ட :

    மைதா மாவு - 1 கப்
    சோள மாவு - 1/2 கப்
    மிளகாய் தூள் - 1 tsp
    மல்லித்தூள் - 1/2 tsp
    சீரகத் தூள் - 1/2 tsp
    மிளகு - 1/2 tsp
    உப்பு - தே. அளவு

    எண்ணெய் - வறுக்க



    செய்முறை

    முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருளை அரைத்து அதன் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

    அகலமான பாத்திரத்தில் ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அதில் அரைத்து எடுத்து வைத்துள்ள வெங்காய சாறையும் ஊற்றுங்கள்.

    நன்குக் கலந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஊற வைத்து ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் ஊற வையுங்கள்.

    அடுத்ததாக ஒரு அகலமான கிண்ணத்தில் சிக்கன் கோட்டிங் அதாவது மாவை சிக்கன் மீது பிரட்ட கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

    காரசார சுவையில் முட்டை போட்டி ஃபிரை..! செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

    தற்போது ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் பிரட்டி எடுங்கள்.

    அடுத்ததாக மீண்டும் ஊற வைத்த கலவையிலேயே முக்கி எடுத்து மைதா மாவில் மீண்டும் பிறட்டி எடுங்கள். மாவு உதிராதவாறு ஒவ்வொன்றாக பிறட்டி எடுங்கள்.

    தற்போது கடாயில் வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.

    பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன் ரெடி. இதற்கு சைட் டிஷாக டொமேட்டோ சாஸ் தொட்டுக்கொள்ளலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: