முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி வீட்டிலேயே மொறு மொறுனு KFC ஸ்டைல் சிக்கன் செய்யலாம்.. ரெசிபி இதோ...

இனி வீட்டிலேயே மொறு மொறுனு KFC ஸ்டைல் சிக்கன் செய்யலாம்.. ரெசிபி இதோ...

KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்

KFC சிக்கன் இனி வீட்டிலேயே செய்யலாம்

KFC Chicken Recipe : கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் வீட்டிலேயே செய்து அசத்துங்கள். உங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் அசத்துங்கள். உங்களுக்கான ரெசிபி இங்கே.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

KFC சிக்கன் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எச்சில் ஊறும். இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று கேஎஃப்சி சிக்கன். அடிக்கடி வெளி உணவுகளை வாங்கி சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல் விளைவிக்கும்.

அதற்காக சாப்பிடாமலும் இருக்க முடியாது. ஆனால், நமக்கு பிடித்த உணவை சுவை மாறாமல் வீட்டிலேயே சமைத்தால்?. இப்படி அனைவருக்கும் பிடித்த KFC சிக்கனை வீட்டிலேயே எளிமையாக சமைப்பது எப்படி என்று இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள் :

தயிர் - 1/2 கப்.

பால் - 1 கப்.

முட்டை - 1.

இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்.

பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.

மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்.

மிளகு தூள் – 2 டீஸ்பூன்.

உப்பு – தேவையான அளவு.

எலுமிச்சை – ½ பழம்.

கோழி துண்டுகள் – 8

மைதா - 1 கப்.

சோள மாவு - 1/2 கப்.

தனியா தூள் – ½ டீஸ்பூன்.

சீரக தூள் - 1/2 டீஸ்பூன்.

பூண்டு தூள் – 1 டீஸ்பூன்.

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், பால் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றவும்.

பின்பு அதனுடன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

Also Read | பிஸ்கட்டில் இப்படியொரு ஸ்வீட் பண்ணலாமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி..!

இப்போது, அந்த கலவையில் கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஊற விடவும்.

பின்னர், தட்டில் மைதா, சோள மாவு, தனியா தூள், சீரக தூள், பூண்டு தூள், மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

இதையடுத்து, ஊற வைத்துள்ள கோழி துண்டுகளை இந்த மாவு சேர்மத்தில் நன்கு கலந்து கொள்ளவும்.

இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தயாராக வைத்துள்ள கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கேஎஃப்சி பிரைடு சிக்கன் தயார்.

விடுமுறை நாட்களில் இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

First published:

Tags: Chicken masala, Chicken popcorn, Food recipes