ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஓணம் பண்டிகைக்கு கேரள ஸ்டைலில் கேரட் பாயாசம் செய்வது எப்படி ?

ஓணம் பண்டிகைக்கு கேரள ஸ்டைலில் கேரட் பாயாசம் செய்வது எப்படி ?

கேரட் பாயாசம்

கேரட் பாயாசம்

ஓணம் பண்டிகையின் போது செய்யப்படும் கேரட் பாயாசம் எப்படி செய்வதென்று பார்ப்போமோ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.இது 10 நாள் நடைபெறும் திருவிழாவாகும்.கேரளாவை போல தற்போது மற்ற மாநிலங்களிலும் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகையின் போது வீட்டில் விதவிதமான உணவுகள் சமைத்து சாப்பிடுவார்கள். அதில் முக்கியமான ஒன்று தான் பாயாசம். தற்போது ஓணம் பண்டிகையின் போது செய்யப்படும் கேரட் பாயாசம் எப்படி செய்வதென்று பார்ப்போமோ..

தேவையான பொருட்கள் :

துருவிய கேரட் - 1 கப்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 5-6

உலர் திராட்சை - 5-6

பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 1/2 கப்

கேசரி பவுடர் - 1 சிட்டிகை

ஏலக்காய் - 4 (நன்கு தட்டியது)

Also Read : வரலட்சுமி நோன்பு: நடிகை உமா ரியாஸ் வீட்டு பெஸ்ட் மெதுவடை சீக்ரெட் இதுதான்!

செய்முறை:

  • முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
  • பின்னர் அதில் துருவிய கேரட்டை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  • நன்கு வதக்கிய பின்பு பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.பால் நன்கு கொதித்த பின்பு தீயை குறைவாக வைத்து 15 நிமிடங்கள் கேரட்டை வேக வைக்க வேண்டும்.
  • வெந்த பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து 5 நிமிடம் கிளறி, பின் தட்டிய ஏலாக்காயை சேர்த்தால் சுவையான கேரட் பாயாசம் ரெடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Food recipes, Kerala, Onam