காலிஃப்ளவரில் எந்த சமையல் செய்தாலும் அது ருசி மிக்கதுதான். அந்த வகையில் காஷ்மீர் சிவப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1 கப்
தயிர் - 1 1/2 கப்
அரைக்க
சோம்பு - 1/2 Tsp
ஏலக்காய் - 1
கருப்பு ஏலக்காய் - 1
கிராம்பு - 1
மிளகு - 1/2 Tsp
காஷ்மீர் சிவப்பு மிளகாய் பொடி - 2 Tsp
பட்டை - 2 இன்ச்
உப்பு - தே. அளவு
குழம்பு தாளிக்க :
கடுகு எண்ணெய் - 1/4 கப்
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
மிளகு - 3
பட்டை - 1 இன்ச்
சோம்பு - 1 Tsp
பெருங்காயத்தூள் - 1/2 Tsp
இஞ்சிப் பொடி - 1/2 Tsp
மிளகாய் பொடி - 1/2 Tsp
உப்பு - தே. அளவு
செய்முறை :
காலிஃப்ளவரை சுடு நீரில் நன்கு அலசி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் மைய அரைத்த பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பாத்திரத்தில் காலிஃப்ளவருடன் அரைத்த மசாலா பொடிகளை சேர்த்து நன்குக் கலக்கி 1 - 1.5 மணி நேரம் ஊற வையுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கிராம்பு, ஏலக்காய், பட்டை என மசாலாக்கள் அனைத்தையும் போட்டு வதக்கவும்.
அடுத்ததாக இஞ்சிப் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஊற வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து பிறட்டவும். மிளகாய் தூள் , உப்பு சேர்த்துக் கிளறவும்.
அடுத்ததாக தயிர் ஊற்றிக் கிளறவும். தற்போது சிறு தீயில் எண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை கொதிக்க விடுங்கள். எண்ணெய் பிரிந்து காலிஃப்ளவர் வெந்ததும், கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிடுங்கள்.
சப்பாத்தி, பரோட்டா, நாண் என ரொட்டி வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.