கருப்பட்டி இப்போது சர்க்கரைக்கு மாற்றாக பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் சுவை தனித்துவமானது என்றாலும் அதன் ஆரோக்கியம் அதைவிட அதிகம். எனவே ஆரோக்கியத்தையும் , அதன் சுவையையும் ஒன்று சேர அனுபவிக்க இப்படி அவ்வப்போது சமையலிலும் சேர்த்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் தினமும் சாப்பிட்டும் தோசை மாவில் உப்புக்கு பதில் கருப்பட்டி வெல்லம் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். சுவை உங்களை மெய் மறக்கச் செய்யும். ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
கருப்பட்டி – 100 கிராம்
கோதுமை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 4 tsp
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் - 2
நெய் - தே.அ
செய்முறை :
முதலில் கருப்பட்டியை இடித்து தூளாக்கி கொஞ்சம் போல் தண்ணீர் சேர்த்து உருக்கிக்கொள்ளுங்கள்.
பின் அதில் அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து கலந்துக்கொள்ளுங்கள். அதோடு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கலக்குங்கள். ஏலக்காயையும் இடித்து சேர்த்துக்கொள்ளுங்கள். பொடி இருந்தாலும் சேர்க்கலாம்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கலந்துகொள்ளுங்கள்.
இப்போது எப்போதும் போல் தோசைக்கல்லில் சுட்டு எடுங்கள். தோசையை சுற்றி ஊற்ற எண்ணெய்க்கு பதில் நெய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் கருப்பட்டி தோசை தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.