கற்பூரவள்ளி இலையில் பஜ்ஜி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா...? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். நன்கு காய்ந்து சூடேறியதும் ஒவ்வொரு முழு இலையாக எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து அப்படியே எண்ணெயில் போடவும்.

கற்பூரவள்ளி இலையில் பஜ்ஜி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா...? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க
கற்பூரவள்ளி பஜ்ஜி
  • Share this:
கற்பூரவள்ளி டீ, கற்பூரவள்ளி கசாயம் என குடித்திருப்பீர்கள். ஆனால் வித்யாசமான சுவையில் கற்பூரவள்ளி பஜ்ஜி சாப்பிட்டிருக்கிறீர்களா..? இதோ ரெசிபி...

தேவையான பொருட்கள்

கற்பூரவள்ளி இலைகள் - 10

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகைமிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
உப்பு - தே.அ
எண்ணெய் - வறுக்கசெய்முறை

இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். கொடுக்கப்பட்டுள்ள மற்றப் பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

செட்டிநாடு சுவையில் தேங்காய் பாறை மீன் குழம்பு - எப்படி செய்வது..?

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வையுங்கள். நன்கு காய்ந்து சூடேறியதும் ஒவ்வொரு முழு இலையாக எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து அப்படியே எண்ணெயில் போடவும்.

நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அவ்வளவுதான் பஜ்ஜியை எடுத்துவிடுங்கள். இந்த சுலபான பஜ்ஜி ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். சுவையில் மெய் மறந்து போவீர்கள்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading