சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?

கற்பூரவள்ளி பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்டது.

சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ : எப்படி போடுவது..?
கற்பூரவள்ளி டீ
  • Share this:
கற்பூரவள்ளி பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்டது. அதில் டீ போட்டுக் குடிப்பதால் சளி, இருமலை எவ்வாறு போக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கற்பூரவள்ளி இலை - 5


டீ தூள் - 1 tsp
தேன் - தே.அ
தண்ணீர் - 2 கப்எலுமிச்சை சாறு - 1 tsp
இஞ்சி - 1/2 துண்டு
மிளகு - 4
ஏலக்காய் - 1செய்முறை :

கற்பூரவள்ளி இலைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள்.

பின் இஞ்சி துண்டை சீவிப் போடுங்கள். மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போடுங்கள். நன்கு கொதிக்கட்டும். கொதித்ததும் வடிகட்டிக்கொள்ளுங்கள்.

பின் கிளாஸில் ஊற்றி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது மாலையில் குடிக்க இதமாக இருக்கும்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading