காரசாரமான சுவையில் கர்நாடகா ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சாப்பிட்டுப் பாருங்கள். மசாலா பொருட்களை அரைத்து வைக்கப்படும் இந்த மணம் கமழும் இந்த குழம்பு அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 300 கிராம்
மிளகாய் பொடி - 1 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தே. அளவு
எண்ணெய்
சமைக்கும் முன் மசாலாவை அரைத்துக்கொள்ளுங்கள். அதற்கு முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றாமல் சிறு தீயில் கசகசா , காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி, வெங்காயம் வதக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பின் தேங்காயை வதக்கிக்கொள்ளுங்கள். தற்போது மசாலா பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் கொஞ்சம் ஊற்றி பேஸ்ட்போல் அரையுங்கள்.
அடுத்ததாக பிரஷர் குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சிக்கனை போடுங்கள். பின் அதில் மஞ்சள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். சிக்கன் பாதி பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.
வதங்கியதும் அரைத்த மசாலாவை கொட்டி சிக்கனோடு பிரட்டுங்கள். பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து மூடி விடுங்கள். 3 - 4 விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.
பிரஷர் தானாக இறங்கியதும் மூடியைத் திறந்து பாருங்கள். உப்பு சரியாக உள்ளதா என பார்த்து சரியாக போட்டுக்கொள்ளுங்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.